நவீன் பட்நாயக் மந்திரிசபையில் மாற்றம் அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா

புவனேஸ்வர் : ஜூம். 4 – நாளை பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அமைச்சரவை புணரமைப்பு நடக்க உள்ள நிலையில் ஒரிசா முதல்வர் நவீன் பட்நாயக் அமைச்சரவையின் அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா கொடுத்துள்ளனர். ஆளும் கட்சியான பிஜு ஜனதா தள அரசு 29 மே 2022ல் தன் ஐந்தாவது முறையின் மூன்று வருடங்களை பூர்த்தி செய்துள்ளது. இந்த நிலையில் அமைச்சரவை புணரமைப்பு 2024 சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் கட்சியை பலப்படுத்த முதல் நடவடிக்கை என கருதப்படுகிறது. பூரி பயணத்தில் உள்ள ஆளுநர் பேராசிரியர் கணேஷ் லால் நாளை மாநில சட்டமன்றத்தின் லோக சேவா பவனில் நடக்க உள்ள நிகழ்ச்சி குறித்து தகவல் அளித்துள்ளார். நாளை காலை 11.45 க்கு ஆளுநர் மாளிகையான லோக சேவா பவன் வளாகத்தில் உள்ள கன்வென்ஷன் மையத்தில் நடக்கவுள்ள நிகழ்ச்சியில் புதிய அமைச்சர்கள் பதவி பிரமாணம் எடுக்க உள்ளனர். ஐந்தாவது முறை முதல்வராகியுள்ள பட்நாயக் ஜூன் 20 முதல் ரோம் மற்றும் துபாய்க்கு செல்ல உள்ளார் மற்றும் அவர் இந்த பயணத்திற்கு புறப்படும் முன்னர் புதிய அமைச்சரவையை அமைக்க விரும்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .