நவீன இந்தியாவை உருவாக்கியவர் நேரு: கார்கே

டெல்லி,நவ- 14 டெல்லியில் உள்ள நேருவின் நினைவிடமான சாந்தி வேனில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். ஜவஹர்லால் நேருவின் மகத்தான பங்களிப்பு இல்லாமல் 21வது இந்தியாவை நினைத்துப் பார்க்க முடியாது. இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் உள்ளிட்டோர் டெல்லியில் உள்ள நேருவின் நினைவிடமான சாந்தி வேனில் மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, பல்வேறு கட்சித் தலைவர்கள் சமூக வலைத்தளங்களில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே தனது டுவிட்டர் பக்கத்தில், “ நவீன இந்தியாவை உருவாக்கியவர் பண்டிட் நேரு. அவரது மகத்தான பங்களிப்பு இல்லாமல் 21வது இந்தியாவை நினைத்துப் பார்க்க முடியாது. ஜனநாயகத்தின் வெற்றியாளர். அவரது முற்போக்கு எண்ணங்கள் சவால்கள் இருந்தபோதிலும், இந்தியாவின் சமூக, அரசியல் மற்றும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தியது. உண்மையான தேசபக்தருக்கு எனது பணிவான மரியாதை” என்றார்.