நவ. 16 புனித் நினைவு அஞ்சலி நிகழ்ச்சி

பெங்களுரு : நவம்பர். 6 – சமீபத்தில் மாரடைப்பால் காலமான கன்னட பிரபல நடிகர் புனித் ராஜ்குமாருக்காக இந்த மாதம் 16 அன்று ‘புனித் நுடி நமனா ‘ நிகழ்ச்சியில் தென் இந்திய திரையுலகின் பிரபல நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் கலந்து கொள்ளும் எதிர்பார்ப்பு உள்ளது. அன்று பிற்பகல் 3 மணிக்கு நகரின் அரண்மனை மைதானத்தில் நடக்கவுள்ள அஞ்சலி கூட்டத்தில் திரையுலகம் மற்றும் அரசியல் துறையின் பிரபலங்கள் பங்குகொள்ள உள்ளனர். புனித் நினைவு நிகழ்ச்சி விஷயமாக திரையுலகின் அனைத்து நடவடிக்கைகளும் நவம்பர் 16 அன்று துவக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. புனித் நினைவு இசை நினைவு , பாடல்கள் நினைவு மற்றும் இதர நிகழ்ச்சிகள் அன்று நடக்கவுள்ளன . புனித் ராஜ்குமார் நடந்து வந்த பாதைகள் குறித்து ஐந்து நிமிடங்கள் ஓட கூடிய சிறப்பு வீடியோ பதிவுகளும் இந்த நிகழ்ச்சியின் போது காட்டப்பட முடிவு செய்யப்பட்டுள்ளது.