நவ. 17 க்குள் வாகனங்களுக்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட‌ நம்பர் பிளேட்

பெங்களூரு, ஆக. 22: நிகழாண்டு நவம்பர் 17 ஆம் தேதிக்குள், 2019 ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதிக்கு முன் பதிவு செய்யப்பட்ட அனைத்து வாகனங்களும் உயர் பாதுகாப்பு பதிவு பலகைகளை (எச்எஸ்ஆர்பி) வைத்திருக்க வேண்டும் என்று மாநில போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 17 ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பில், நவம்பர் 17 ஆம் தேதிக்கு பிறகு, காலக்கெடுவைக் கடைப்பிடிக்கத் தவறும் வாகன உரிமையாளர்களுக்கு எதிராக ரூ. 500 முதல் ரூ. 1,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதுநிரந்தர அடையாள எண் மற்றும் குரோமியம் அடிப்படையிலான ஹாலோகிராம் போன்ற பல தனித்துவமான அம்சங்களைக் கொண்டுள்ளதால், எச்எஸ்ஆர்பிஎஸ்-ஐ சேதப்படுத்த முடியாது, மேலும் பதிவுத் தகடுகளில் சீரான தன்மையை உறுதிப்படுத்த உதவும் என்று போக்குவரத்துத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
போக்குவரத்துத் துறையின் மதிப்பீட்டின்படி, 2019 ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதிக்கு முன்பு, மாநிலத்தில் சுமார் 1.75 கோடி முதல் 2 கோடி வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த அனைத்து வாகனங்களுக்கும் எச்எஸ்ஆர்பி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தற்போது, ​​இந்த நம்பர் பிளேட்டை வாகன விற்பனையாளர்களுக்கு வழங்க அங்கீகரிக்கப்பட்ட எச்எஸ்ஆர்பி உற்பத்தியாளர்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளனர் என்று அந்த அதிகாரி மேலும் கூறினார்.
மேலும், பழைய வாகனங்களுக்கு கூட, அங்கீகரிக்கப்பட்ட எச்எஸ்ஆர்பி உற்பத்தியாளர்களால் நம்பர் பிளேட்டுகள் வழங்கப்படும் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
பழைய வாகனங்களின் உரிமையாளர்கள் வாகன உற்பத்தியாளர்களின் அங்கீகரிக்கப்பட்ட டீலர்கள் மூலம் எச்எஸ்ஆர்பிஐ நிறுவுவதற்கான ஆர்டர்களை பெற‌ முடியும்.எச்எஸ்ஆர்பி சப்ளையர்களிடம் அங்கீகரிக்கப்பட்ட எச்எஸ்ஆர்பி நம்பர் பிளேட் விலை குறித்து கேட்டதற்கு, அதிகாரி கூறியதாவது: ஹெச்எஸ்ஆர்பியின் தேர்ந்தெடுக்கப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட சப்ளையர்களை போட்டி விலையில் நம்பர் பிளேட்டுகளை விற்பனை செய்து வருகின்றனர். 4 சக்கர வாகனங்களின் விலை ரூ.400 முதல் ரூ.500 வரையிலும், இரு சக்கர வாகனங்களுக்கு ரூ.300 முதல் ரூ.250 க்கும் இடையில் விலை இருக்கும். ஏற்கனவே மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, 12 மாநிலங்கள் இந்த விதியை அமல்படுத்தியுள்ளன.நம்பர் பிளேட்டுகளை சேதப்படுத்துதல் மற்றும் போலியாகத் தயாரிப்பதைத் தடுப்பதன் மூலம், எச்எஸ்ஆர்பி வாகனங்களால் ஏற்படும் குற்றங்களைச் சரிபார்க்கவும், சாலைகளில் ஓடும் அனைத்து வாகனங்களையும் அடையாளம் காணவும் உதவுகிறது என்று போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. அங்கீகரிக்கப்பட்ட நம்பர் பிளேட்டுகளை நிறுவிய பிறகு, அங்கீகரிக்கப்பட்ட டீலர்கள் அல்லது உற்பத்தியாளர்கள் வாகன் போர்ட்டலில் லேசர்-குறியீடு புதுப்பிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். பதிவுச் சான்றிதழ்கள் மற்றும் உடற்தகுதிச் சான்றிதழ்கள் இல்லாத வாகனங்கள் (போக்குவரத்து வாகனங்களில்), மற்றும் சாலை வரி காலாவதியான வாகனங்கள் அங்கீகரிக்கப்பட்ட நம்பர் பிளேட்டுகளை வைத்திருக்க அனுமதி இல்லை.