நாக்கால் மூக்கை தொட்டு மாணவி சாதனை

பெங்களூர், ஜன. 14-
பெங்களூர் எலக்ட்ரானிக் சிட்டி பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி தேவாஸ்ரீ அமர் தொக்களே என்பவர் ஆசியாவின் சர்வதேச சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.
அமர் பஜ்ராவ் தொக்கலே – திருப்தி தம்பதியின் மகள் ஸ்ரீதேவா. இவர் குழந்தை பருவத்தில் இருந்து நாக்கால் மூக்கை தொடும் பயிற்சியில் இருந்தார்.
எனவே, இவரின் ஆர்வத்தை பெற்றோர் ஊக்கப் படுத்தினர்.
இவர் தனது நாக்கால் அவரின் மூக்கை தொடும் போட்டியில் ஆரம்ப கால முதலே பல்வேறு சாகசங்கள் புரிந்தார்.
ஆரம்பத்தில் இந்திய சாதனையாக 8 நிமிடம் தனது நாக்கால் மூக்கை தொட்டார். அப்போது அவர் ‘கிராண்ட் மாஸ்டர்’
என்ற சான்றிதழை பெற்றார்.
அதனைத் தொடர்ந்து ஆசியாவின் சர்வதேச சாதனைக்கு இடம்பெற்று 22 நிமிடங்கள் தனது நாக்கால் தனது மூக்கை தொட்டு சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.
உலக சாதனையாளர் ‘கின்னஸ்’ புத்தகத்தில் இடம் பெற முயற்சித்த வேளையில் கோவிட் -19 இருந்ததால் இப் போட்டியில் பங்கேற்க தவிர்க்கப்பட்டது.நெதர்லாந்தை சேர்ந்த ஒரு பெண் 14 நிமிடம் ஒரு வினாடி நேரத்தை ஏற்று நாக்கால் மூக்கை தொட்டு சாதித்துள்ளார்.அதனை முறியடிக்கும் வகையில் 50 நிமிடங்களில் சாதிக்க தேவாஸ்ரீ கின்னசில் இடம் பெறுவார்
என்று அவரது தந்தை அமர் பஜ்ராவ் தொக்கலே தெரிவித்துள்ளார்.