நாச வேலைக்கு வெளிநாட்டு நிதி விசாரணையில் பரபரப்பு தகவல்

பெங்களூர் : நவம்பர். 22 – மொத்த மாநிலத்தை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ள மங்களூர் ஆட்டோ வெடிகுண்டு விவகாரம் குறித்து விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ள போலீஸ் குழுவினர் பல அதிர்ச்சி தரும் தகவல்களை விசாரணைகளின் போது கண்டெடுத்துள்ளனர். வெடிகுண்டுவெடிப்பு சம்பவத்திற்கு பின்னர் குற்றவாளி ஷாரீக் சகோதரியின் வங்கி கணக்கிற்கு பல லட்சங்கள் பணம் வந்துள்ளது என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது . இவ்வளவு அதிக அளவில் ஷாரிக்கிற்க்கு எப்படி எவ்விதத்தில் பணம் வந்துள்ளது என தற்போது விசாரணை அதிகாரிகளுக்கு சந்தேகங்கள் வந்துள்ளது. இந்திய நாட்டை குறியாக வைத்து வெளிநாட்டிலிருந்து நிதியுதவிகள் வந்திருப்பது குறித்து போலீசார் தகவல்களை சேகரித்து விசாரணைகளை தற்போது தீவிரப்படுத்தியுள்ளனர். மங்களூரில் நடநத ஆட்டோ வெடிகுண்டு சம்பவத்திற்கு பெங்களூரின் தொடர்பு இருப்பது போலீசாரின் விசாரணையில் பகிரங்கமாகி உள்ளது . வெடிகுண்டை நடத்தி காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் ஷாரீக் தொடர்பு வைத்திருந்த ருஹுல்லா நகரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளான் . காடுகொண்டனஹள்ளி பகுதியில் ரூஹால்ல இருக்கும் இடம் குறித்து மொபைல் இட அடையாளம் கிடைத்துள்ளது . அங்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்ட போலீசார் அங்கு மொபைல் , மடிக்கணினி , ஆகியவற்றை சோதனை செய்ததில் ஷ்ரீக்குடன் ருஹுல்லா நிரந்தர தொடர்புகள் வைத்திருந்தது தெரியவந்துள்ளது . பின்னர் சந்தேகத்துக்குரிய ருஹுல்லாவை மைசூர் போலீசார் கைது செய்து மங்களூருக்கு அழைத்து சென்றுள்ளனர். ஷாரீக் தன் நண்பன் மாஸ் என்பவன் கைதுசெய்யப்பட்டதை பொறுக்கமுடியாமல் அதற்க்கு பழி வாங்கும் முயற்சியாக வெடிகுண்டை வெடிக்க செய்ய முற்பட்டுள்ளான். குரு யாசீன் , நண்பன் மாஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டதற்கு பதிலடியாக பழி தீர்த்துக்கொள்ள இந்த வகையில் செய்யப்பட்டுவந்திருப்பதுட இந்த மூன்று பேரும் இந்தியாவை இஸ்லாம் நாடாக மாற்ற குறி வைத்திருந்தனர் என்பதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.