நாடாளுமன்ற நிலைக்குழுவில் மீண்டும் ராகுல் காந்தி

புதுடெல்லி,ஆகஸ்ட். 17 – பாதுகாப்புத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினராக மீண்டும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா வெளியிட்டுள்ளார்.
பாதுகாப்புத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக் குழுவில் காங்கிரஸ் எம்.பி.க்கள் ராகுல் காந்தி, அமா் சிங் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனர். இதேபோல வேளாண்மை, கால்நடை பராமரிப்பு, உணவு பதப்படுத்துதல் துறைக்கான நாடாளுமன்ற நிலைக் குழுவில் ஆம் ஆத்மி எம்.பி. சுஷீல் குமாா் ரிங்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
நுகா்வோா் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக் குழுவில் தேசியவாத காங்கிரஸ் எம்.பி. ஃபைசல் பி.பி.முகமது நியமிக்கப்பட்டுள்ளார். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எம்.பி. பதவியிலிருந்து ராகுல் காந்தி தகுதிநீக்கம் செய்யப்படுவதற்கு முன்பாக, பாதுகாப்புத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக் குழுவில் இடம்பெற்றிருந்தாா். அவரின் தகுதிநீக்கத்தை ஆகஸ்ட் 7-ஆம் தேதி மக்களவைச் செயலகம் ரத்து செய்ததையடுத்து அவர் மீண்டும் எம்.பி.யானார்.