நாடுதான் உயர்ந்தது என்று நினையுங்கள் – கவர்னர்

பெங்களூர்,நவ.20- வாழ்க்கைக்கு அர்த்தம் தரவும், சமூக ஏற்றத்தாழ்வு, தீய பழக்கவழக்கங்கள் மற்றும் போதை பழக்கங்களிலிருந்து விலகி, நாட்டையே உயர்ந்ததாக நினைத்து, நாட்டின் நலனுக்காக உழைக்க வேண்டும் என்று கர்நாடக கவர்னர் தாவர் சந்த் கெலாட் அழைப்பு விடுத்தார்.மத்திய விளையாட்டு அமைச்சகம், இளைஞர் அதிகாரம் மற்றும் விளையாட்டுத் துறை, கர்நாடக அரசு, நேரு யுவ கேந்திரா சங்கதன் இணைந்து நடத்திய 14வது பழங்குடியின இளைஞர் பரிமாற்ற நிகழ்ச்சியை நகரில் உள்ள யவனிகா ஹாலில் தொடங்கி வைத்து அவர் பேசினார்.
பழங்குடியின இளைஞர் பரிமாற்றத் திட்டத்தில் இருந்து சமயம், கலாச்சாரம், இயற்கை மற்றும் புவியியல் தகவல்களைப் பார்த்து, கேட்டறிந்து, படித்து, கருத்துக்களைப் பரிமாறிக்கொள்வதன் மூலம், ஒருவரையொருவர் புரிந்துகொள்ளவும், நாட்டின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தைப் பற்றி அறிந்து கொள்ளவும் வாய்ப்பு கிடைக்கும் என்று கவர்னர் பேசும்போது குறிப்பிட்டார்.