புதுடெல்லி செப்.30- அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி கொண்டாடப்பட உள்ளது.தூய்மையை வலியுறுத்தி காந்தியடிகளுக்கு நாம் தூய்மை இயக்கத்தின் மூலம் அஞ்சலி செலுத்த வேண்டும். பிரதமர் மோடி அறிவித்த தூய்மை இயக்கம் குறித்து கேபினட் செயலாளர், மத்திய அரசின் பல்வேறு துறைகள், மாநில அரசுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இதன்படி அக்டோபர் 1-ம் தேதி காலை 10 மணிமுதல் 11 மணி வரை நாடு முழுவதும் ஒரு மணி நேரம் தூய்மை இயக்கம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பூங்காக்கள், நதிகள், சுற்றுலா தலங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தூய்மை இயக்கம் நடத்தப்படும்.
மேலும் வீடு மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்பது குறித்து பொதுமக்களிடம் விழிப்பு ணர்வு ஏற்படுத்தப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளனஇதற்காக நாட்டு மக்கள் அனைவரும் அக்டோபர் 1ம் தேதி, பொது இடங்களில் ஒரு மணி நேரம் தூய்மைப் பணியை மேற்கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார். காந்தியடிகளுக்கு நாம் தூய்மை இயக்கத்தின் மூலம் அஞ்சலி செலுத்த வேண்டும்.அக்டோபர் 1 ம் தேதி அதாவது ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு தூய்மை பற்றிய ஒரு பெரிய நிகழ்வுக்கு மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
உங்கள் தெரு, அல்லது சுற்றுப்புறம் அல்லது பூங்கா, ஆறு, ஏரி அல்லது வேறு எந்த பொது இடத்திலும் நீங்கள் நேரம் ஒதுக்கி பணியில் ஈடுபடலாம் என கூறியுள்ளார். காந்தி பிறந்தநாளை முன்னிட்டு ஏற்கனவே, ‘தூய்மை இந்தியா’ என்ற பெயரில் செப்டம்பர் 15 முதல் பிரம்மாண்ட தூய்மைப் பணி நடந்து வருகிறது. இந்நிலையில், அக்டோபர் 1 காலை 10-11 மணி வரை, பொது மக்கள் அனைவரும் தூய்மைப் பணியில் ஈடுபட வேண்டும் என பிரதமர் மோடி அழைப்பு விடுத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.