நாடு முழுவதும் யோகா – டெல்லியில் ஜனாதிபதி பங்கேற்பு

புதுடெல்லி, ஜூன்.- 21 – சர்வதேச யோகா தினம் இன்று உலகமெங்கும் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி இந்தியாவில் பல்வேறு இடங்களில் சிறப்பு பயிற்சிக்கு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. அந்தவகையில் நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் யோகா நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது .கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக யோகா தின கொண்டாட்டங்கள் சிறப்பாக நடத்த முடியாததால், இந்த ஆண்டு பிரமாண்டமாக அனுசரிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகை ராஷ்டிரபதி பவன்-ல் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது .இதில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பங்கேற்றுள்ளார்.. இது குறித்து பேசிய அவர் கூறுகையில் ; யோகா நமது இந்திய பாரம்பரியத்தின் ஒரு பகுதியாகும். , இது ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான ஒரு முழுமையான அணுகுமுறையாகும், இது நமது மனம், உடல் ஆகியவற்றை சமநிலைப்படுத்துகிறது” என்று அவர் கூறினார் .