நாட்டின் நிலைமையில் விரைவில் மாற்றம்: தெலுங்கானா முதல்வர்

பெங்களூர்: மே. 26 – நாட்டின் நிலைமை வெகு விரைவில் மாறுதல் அடையும் என தெலுங்கானா முதல்வர் கே சி சந்திரசேகர ராவ் ஆரூடம் சொல்லியுள்ளார். இது குறித்து கே சி சந்திரசேகர ராவ் கூறுகையில் கர்நாடகத்தின் அரசியல் குறித்தும் எனக்கு தெரியும். கர்நாடகாவில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ளது. குமாரசாமி ஏற்கெனவே முதல்வராய் இருந்தவர். இந்தியாவை மாற்றியமைக்கும் பணி நடக்க உள்ளது. அந்த நோக்கில் நாங்கள் முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம் என தெரிவித்தார் , நாட்டில் பா ஜ வுக்கு மாற்றாக மூன்றாவது அணியை அமைப்பது குறித்து இன்று பெங்களூரில் ம ஜ தா தேசிய தலைவர் தேவேகௌடாவிடம் சந்திரசேகர ராவ் தீவிர ஆலோசனை நடத்த்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில் நாட்டில் விவசாயிகள் , தலித்துகள் , ஆதிவாசிகள் மிகவும் கஷ்டத்தில் உள்ளனர். நம்பிக்கைகளை தேவையான அளவிற்கு எவராலும் கொடுக்க முடியும். ஆனால் இந்த நோக்கில் எந்தெந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது ? இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் தரப்படவில்லை. நாட்டில் அனைத்து விஷயங்களுமே பிரச்சனைகளே என மத்திய அரசுக்கு எதிராக குற்றம் சாட்டினார். இதே வேளையில் முன்னாள் மாநில முதல்வர் குமாரசாமி கூறுகையில் .சந்திரசேகர் ராவ் தேவேகௌடாவுடன் மூன்று மணிநேரம் ஆலோசனைகள் நடத்தியுள்ளார். நாட்டின் தற்போதைய பிரச்சனைகள் குறித்து ஆலோசித்துள்ளனர். இன்னும் சில மாதங்களில் நல்ல தகவல்கள் வெளிவர உள்ளன என தெரிவித்தார்.