நாட்டின் பல மாநிலங்களில் மழை பெய்யும்

புதுடில்லி, மார்ச் 27-
சமீப காலமாக பெரும்பாலான பகுதிகளில் சீரற்ற கால நிலை காரணமாக பொதுமக்கள், விவசாயிகள், அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
சரியான நேரத்தில் மழை பெய்யாததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதித்தது. இன்று புதன்கிழமை மார்ச் 27ல் அருணாச்சல பிரதேசம், அசாம், மேகாலயா, உள்ளிட்ட வடகிழக்கு பகுதிகளில் இடியுடன் மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல மேற்கு வங்காள பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யும்.வடகிழக்கு பகுதியில் கனமழை பெய்யும். அசாம், மேகாலயா ஆகிய இடங்களில் கன மழை எதிர்பார்க்கப் படுகிறது. நேற்றும் மழை நன்றாக பெய்தது. மார்ச் 27ம் தேதி வடகிழக்கு பகுதிகளான அருணாச்சல பிரதேசம் அசாம் மேகாலயா, நாகாலாந்து, மணிப்பூர், மிசோராம், திரிபுரா, மேற்கு வங்கம், சிக்கிம் ஆகிய இடங்களில் இடியுடன் மின்னல் மிதமான மழை பெய்தது. தெலுங்கானா, ராயல சீமா, தமிழகம், புதுச்சேரி காரைக்கால், கேரளா மாஹே, ஆகிய இடங்களிலும் மார்ச் 29 வரை மழை பெய்யும். ஈரப்பதத்துடன் வானிலை இருக்கும். கர்நாடகாவில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கங்கை நிதியான மேற்கு வங்கத்தில் இன்று இடியுடன் மிதமான மழை பெய்யும் 28 , மற்றும் 29 ஆகிய தேதிகளில் பஞ்சாப் ஹரியானாவில் இடி மின்னலுடன், லேசான மழை பெய்யும்.மார்ச் 28 வியாழக்கிழமை கிழக்கு ராஜஸ்தான் 29 லும் உத்தரப்பிரதேசம் ஆகிய இடங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்யும்.
மேற்கு தொடர்ச்சியான
ஜம்மு காஷ்மீர் ,லடாக், கில்கிட், பால்டி ஸ்தான், முசாபராபாத், ஆகிய இடங்களில் 27 மற்றும் 29 வரையிலும், ஹிமாச்சல் பிரதேசம் மற்றும் உத்தரகாண்டில் 28 , மற்றும் 29 ஆகிய தேதிகளிலும், இடி மின்னலுடன் லேசான மழை பெய்யும். ஹிமாச்சல் பிரதேசத்தில் மார்ச் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் ஆலங்கட்டி மழை பெய்யும் என தெரியவந்துள்ளது.
பீகாரில் கிஷன்கன்ச் மற்றும் ஆராரியாவில் இன்று 27 ல் ஓரளவு மழை பெய்யும். இம்மாத இறுதியான மார்ச் 30 மற்றும் 31 வரையில் சீதா மர்ஹி, ஹிவார், முசாபர், வைஷாலி, மதுபானி, தர்பங்கா, ஆகிய இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் .என்று, இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.