நாத்தனாருடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி கைது

பெங்களூர் : அக்டோபர் . 19 – பீஹாரை சேர்ந்த ஷகீல் என்பவரை கொடூரமாக கொலை செய்து விட்டு உடலை குழியில் மூட்டை கட்டி போட்டிருந்தநிலையில் போலீசுக்கு மிக பெரிய சவாலாக இருந்த இந்த வழக்கில் துப்பு துலக்கியுள்ள சம்பிகேஹள்ளி போலீசார் மனைவியே தன்னுடைய நாத்தனாருடன் சேர்ந்து கணவனை கொன்றிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது . கணவன் ஷகீல் அக்தர் என்பவரை கொலை செய்து அவன் காணாமல்போயுள்ளான் என போலீஸ் நிலையத்தில் புகார் அளித்த சயீலின் இரண்டாவது மனைவி நசீர் குட்டான் (25) மற்றும் அவளுடைய அக்கா காஷ்மீரி (28) ஆகியோர் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் சாம்பிகேஹள்ளியில் வசித்துவந்த ஷலீலை கடந்த அக்டோபர் 9 அன்று அவருடைய வீட்டிலேயே குற்றவாளிகள் கொலை செய்துள்ளார். அன்று நகரில் மழை பெய்து வந்த நிலையில் இதையே தங்களுக்கு சாதகமாக்கிக்கொண்ட கொலையாளிகள் யாருடைய கவனத்துக்கும் வராத வகையில் கொலைக்கு திட்டம் தீட்டியுள்ளனர். கட்டிலின் மீது படுத்திருந்த ஷகீலின் மார்பில் உட்கார்ந்த இரண்டாவது மனைவி நசீர் அவனுடைய கழுத்தை நெருக்கினாள் . நாத்தனார் காஷ்மீரி அவனுடைய காய் கால்களை கெட்டியாக பிடித்துகொண்டாள் . கட்டிலின் மேலிருந்து கீழே விழுந்தாலும் விடாத இரண்டுபேரும் சேர்ந்து ஷலீலை கழுத்து நெரித்து கொலை செய்துள்ளனர். கொலைக்கு பின்னர் படுக்கை விரிப்பில் உடலை சுற்றி கட்டி நள்ளிரவு பலத்த மழை பெய்துகொண்டிருந்த நேரத்தில் உடலை கொண்டுசென்று வீட்டிலிருந்து சற்றே தூரத்தில் இருந்த குழியில் போட்டுவிட்டு வந்து விட்டனர். இரண்டு நாட்களுக்கு பின்னர் தன்னுடைய கணவன் காணவில்லை என மனைவியே போலீஸ் நிலையத்திற்கு வந்து புகார் கொடுத்துள்ளான் . ஆனால் குழியில் அக்டோபர் 15 அன்று துர் வாசனை வந்ததில் இது குறித்து போலீசார் ஆராய்ந்ததில் குழியில் இறந்த உடல் இருப்பது தெரியவந்துள்ளது. பின்னர் விசாரணை மேற்கொண்ட போலீசார் குற்றவாளிகள் இருவரையும் கைது செய்துள்ளனர்.