நான் பிஜேபி பி-டீம் தான்-ராகுலுக்கு தேவகவுடா பதிலடி

சிட்லகட்டா : ஏப்ரல். 20 – இதற்க்கு முன்னர் ஹாசனுக்கு வந்த போது ராகுல் காந்தி என்னை பிஜேபியின் பி டீம் என்றார். கோலாரின் மாலூருக்கு வந்து எங்கள் கூட்டணி வேட்பாளரை தோற்கடிக்க கூறுகிறார். ஆம் நான் பிஜேபி பி டீம் தலைவன்தான். என முன்னாள் பிரதமரும் ம ஜ தா தேசிய தலைவருமான ஹெச் டி தேவகோடா ராகுல் காந்திக்கு காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார். கோலார் பாரமுமன்ற தொகுதியின் சிட்லகட்டா தாலூகா வொய் ஹுனஸேஹள்ளி அருகில் நேற்று நடந்த பிஜேபி தொண்டர்கள் மாநாட்டில் பேசிய தேவேகௌடா பத்தாண்டுகளுக்கு முன்னர் அதிக பெரும்பான்மை பெற்று நரேந்திர மோதி பிரதமர் ஆனால் என் பதவியை ராஜினாமா செய்து அரசியலில் இருந்து ஓய்வு பெறுவேன் என நான் சொல்லியிருந்தேன். ஆனால் பிஜேபி ஆட்சிக்கு வந்தது மோதி பிரதமரும் ஆனார். அப்போது நான் ராஜினாமா செய்ய சென்ற போது மோதி உங்களைப்போன்ற மூத்த அரசியல்வாதிகளின் வழிகாட்டுதல்கள் எனக்கு தேவை படுகிறது. தேர்தல் நேரங்களில் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டுவது சகஜம். அதையே தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டாம். எண்டு கூறி என்னை அனுப்பிவைத்தார் என தேவேகௌடா தெரிவித்தார். மேலும் அவர் பேசுகையில் அம்பேத்கர் நம் நாட்டிற்கு நல்ல அரசியல் சாசனத்தை அளித்து இந்த நாட்டில் எப்படி ஆட்சிகள் நடத்தவேண்டும் என வழிகாட்டிய மகா உத்தமர். அத்தகையவரை காங்கிரசார் பாராளுமன்றத்தில் அனுமதிக்கவில்லை. அம்பேத்கர் பாராளுமன்றத்திற்கு தேர்வு ஆகாத வகையில் செய்ததன் விளைவாய் இன்று உத்தரப்பிரதேசத்திலிருந்தே காங்கிரஸ் மாயமாகும் நிலைமை உருவாகியுள்ளது. நேரு இந்திராகாந்தி ராஜிவு காந்தி ஆகியோரின் தொடர்ந்து 40 ஆண்டுகள் பிரதிநிதித்துவம் பெற்றிருந்த உத்தரபிரதேசத்தில் தேர்தலில் நிற்க ராகுல் காந்தி தயாரில்லை. வேறு தொகுதியை தேடி கேரளாவுக்கு செல்கிறார். அது தவிர பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி பதவியை பெற போதுமான அளவிற்கு இடங்களை கூட வெற்றிபெறாத நிலைக்கு காங்கிரஸ் வந்துள்ளது. நான் முஸ்லீம்களுக்கு குருபருக்கு , கோளாறுக்கு , மோசமாகட்டும் அநியாயம் ஆகட்டும் செய்தவனல்ல . ஏன் காலத்தில் முஸ்லீம்களுக்கு 4 சதவிகித இட ஒதுக்கீடு கொண்டுவந்தது நான். நேரு அல்ல இந்திரா காந்தியும் அல்ல . அதனாலேயே தாலூகா பஞ்சாயத்து ஜில்லா பஞ்சாயத்து , மற்றும் நகர மாநகராட்சிகளில் முஸ்லீம் பெண்களும் அதிகாரத்திற்கு வர முடிந்தது. மாநிலத்தை லூட்டி அடித்து ஆட்சி நடத்தி கொண்டிருக்கும் காங்கிரஸ் ஆட்சி பாரமுமன்ற தேர்தலுக்கு பின்னர் கவிழ்ந்து விடும். 40 ஆண்டுகள் நாட்டை ஆண்ட காங்கிரசார் நாட்டை சீரழித்தனர். நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல மோதி வரவேண்டியதாயிற்று. இவ்வாறு ஹெச் டி தேவேகௌடா பேசினார்.