நாய் கடித்து 12 பேர் காயம்

பெங்களூர் : நவம்பர் 25 – நெலமங்களாவில் கண்ணில் தென்பட்டவர்களையெல்லாம் பைத்திய நாய் ஒன்று கடித்து குதறியதில் 12 பேர் காயங்களடைந்துள்ளனர். இந்த நாயின் கடிப்பால் பரமேஷ் , சவுடப்பா , கிருஷ்ணா , சவுடாரெட்டி , முஹம்மத் , கிஷோர் , ராதா , தன்வீர் உட்பட 12க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ள நிலையில் இவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறர்கள் .
சம்பவம் குறித்து தகவல் அறிந்த நெலமங்களா போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தவிர இன்ஸ்பெக்டர் சதீதர் தலைமையில் இந்த பைத்திய நாயை பிடிக்க நடவடிக்கைகள் ஏற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் பாதிப்புக்குள்ளான உறவினர்களால் இந்த நாய் நெலமங்களா டி பி பஸ் நிலையம் அருகில் அடித்து உதைத்து கொல்லப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.