நாய் மீது காரை ஏற்றிய டிரைவர் கைது

பெங்களூர் : ஜூன். 15 – வளர்ப்பு நாய் மீது காரை ஏற்றிவிட்டு பின்னர் தப்பிக்க முயன்ற குற்றவாளியை பியாடரஹள்ளி போலீசார் கைது செய்துள்ளனர். கார் ஓட்டுநர் சிவகுமார் கைது செய்யப்பட்ட குற்றவாளி ஆவார். .
கடந்த ஜூன் 4 அன்று ஆந்திரஹள்ளியின் ஸ்ரீனிவாஸ் கோயில் அருகில் ஹரீஷ் என்பவர் பூமர் என்ற தன் வளர்ப்பு நாயுடன் நடை பயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது வேகமாக வந்த கார் நாய் மீது மோதியுள்ளது. பின்னர் கார் ஓட்டுநர் சிவகுமார் காரை நிறுத்தாமல் தப்பிக்க முயற்சித்துள்ளார். கடைசியில் காரை நிறுத்தி சிவகுமாரின் காரிலேயே நாயை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இந்த விபத்தில் நாயின் இருதய பகுதி மற்றும் காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சிவகுமாருக்கு எதிராக பியாடரஹள்ளி போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவானது. குற்றவாளியை கைது செய்துள்ள போலீசார் தற்போது அவனிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.