நாராயண மூர்த்தி மகள் அக்‌ஷதாவுடன் ஐஸ்கிரீமை ருசிக்கும் புகைப்படம்

பெங்களூரு, பிப். 13: பிரிட்டனின் முதல் பெண்மணி அக்‌ஷதா மூர்த்தி மற்றும் அவரது தந்தை, இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண் மூர்த்தி, பெங்களூரில் உள்ள புகழ்பெற்ற ஐஸ்கிரீம் பார்லரில் ஒன்றாக அமர்ந்துள்ள‌ சமீபத்திய புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரல் ஆகியுள்ளது.
பெங்களூரு கார்னர் ஹவுஸ் ஐஸ்கிரீம் பார்லரில் அக்ஷதா தனது தந்தையின் அருகில் அமர்ந்திருக்கும் காட்சி அந்த புகைப்படத்தில் உள்ளது. மகள்-தந்தை இருவரும் குடும்ப நேரத்தை ரசிக்கும் படம் எக்ஸ் (முன்னர் ட்விட்டர் என அழைக்கப்பட்டது) உட்பட பல்வேறு சமூக ஊடக தளங்களில் பகிரப்பட்ட பின்னர் வைரலானது.
இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கை மணந்த அக்ஷதா, ஜெயநகரில் உள்ள பெங்களூரு கார்னர் ஹவுஸ் ஐஸ்கிரீம் பார்லரில் தனது தந்தையின் அருகில் சாதாரண உடையணிந்து ஐஸ்கிரீம் உள்ள கோப்பையை பிடித்துக் கொண்டு கேமராவுக்கு போஸ் கொடுத்தார்.