நாளிதழ் 200 வது ஆண்டு விழாவில் மோடி

டெல்லி : ஜூன். 14
பிரதமர் நரேந்திர மோடி இன்று மகாராஷ்டிரா செல்லவிருக்கிறார். மதியம் 1:45 மணிக்கு புனேவின் டெஹுவில் உள்ள ஜகத்குரு ஸ்ரீசாந்த் துக்காராம் மகாராஜா ஆலயத்தை பிரதமர் திறந்து வைப்பார். மாலை 4:15 மணிக்கு மும்பையின் ராஜ்பவனில் ஜல் பூஷன் கட்டிடத்தையும், புரட்சியாளர்களின் அரங்கையும் அவர் திறந்து வைக்க உள்ளார். அதன் பிறகு மாலை சுமார் 6 மணிக்கு மும்பையின் பந்தரா குர்லா வளாகத்தில் நடைபெறும் மும்பை சமாச்சார் நாளிதழின் த்விஷதாப்தி மகோத்சவத்தில் பிரதமர் கலந்து கொள்கிறார்.
புனேவின் டெஹுவில் உள்ள ஜகத்குரு ஸ்ரீசாந்த் துக்காராம் மகாராஜா ஆலயத்தை பிரதமர் திறந்து வைப்பார். சந்த் துக்காராம், ஓர் வார்க்காரி துறவி மற்றும் கவிஞர் ஆவார். அபங்கா பக்தி கவிதைகள் மற்றும் கீர்த்தனைகள் எனப்படும் ஆன்மீக பாடல்கள் மூலம் சமூகம் சார்ந்த வழிபாட்டிற்கு அவர் பிரபலமானவர். அவர் டெஹுவில் வசித்து வந்தார்.‌ அன்னாரது மறைவிற்குப் பிறகு ஓர் கல் கோவில் கட்டப்பட்டது, எனினும், ஓர் முறையான ஆலயமாக அது வடிவமைக்கப்படவில்லை. 36 சிகரங்களைக் கொண்ட கல் செதுக்கல்களால் அது புனரமைக்கப்பட்டிருப்பதுடன், சந்த் துக்காராமின் சிலையையும் கொண்டுள்ளது.
மும்பையின் ராஜ்பவனில் ஜல் பூஷன் கட்டிடத்தையும், புரட்சியாளர்களின் அரங்கையும் பிரதமர் திறந்துவைப்பார். ஜல் பூஷன் என்பது 1885 முதல் மகாராஷ்டிரா ஆளுநரின் அதிகாரபூர்வமான இல்லமாகும். கட்டிடத்தின் வாழ்நாள் நிறைவடைந்த பிறகு, அது இடிக்கப்பட்டு அந்த இடத்தில் புதிய கட்டிடத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆகஸ்ட், 2019- இல் மேதகு இந்திய குடியரசுத் தலைவர் இதற்கான அடிக்கல்லை நாட்டினார். பழைய கட்டிடத்தின் தனித்துவம் வாய்ந்த அம்சங்கள் அனைத்தும் புதிதாக நிறுவப்பட்டுள்ள கட்டிடத்தில் பாதுகாக்கப்பட்டுள்ளன.