நாளை இறைச்சி விற்பனைக்கு தடை

பெங்களூரு, மே 22:
புத்த பூர்ணிமாவையொட்டி பெங்களூரில் வியாழக்கிழமை இறைச்சி விற்பனைக்கு பெங்களூரு மாநகராட்சி (பிபிஎம்பி) தடை விதித்துள்ளது.பிபிஎம்பியின் கால்நடை பராமரிப்புத் துறை ஒரு செய்திக்குறிப்பில், புத்த பூர்ணிமாவையொட்டி பெங்களூரில் வியாழக்கிழமை இறைச்சி மற்றும் விலங்குகளை வதைப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. எனவே அன்று இறைச்சி விற்பனை செய்வதை தடை செய்துள்ளது. தடையை மீறி யாரும் இறைச்சியை விற்பனை செய்தால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.
மகாவீர் ஜெயந்தி மற்றும் ராமநவமிக்கு ஏப்ரல் மாதத்தில் இதேபோன்ற தடை இரண்டு முறை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.