நாளை நம்ம மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு

பெங்களூரு, நவ. 4: மெட்ரோ மெட்ரோ ரயில் கழகம் (பிஎம்ஆர்சிஎல்) படி, எஸ்.வி சாலை மற்றும் இந்திராநகர் நிலையங்களுக்கு இடையேயான பராமரிப்புப் பணிகள் காரணமாக ஞாயிற்றுக்கிழமை (நவ.5) காலை 7 மணி முதல் 9 மணி வரை எம்ஜி சாலை மற்றும் பையப்பனஹள்ளி இடையே மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட உள்ளது. பின்னர் 9 மணிக்கு பிறகு வழக்கம் போல் மெட்ரோ ரயில் சேவை பொதுமக்கள் பெற முடியும்.
பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில், மெட்ரோ சேவை காலை 7 மணிக்கு மேல் தொடங்கும். எனவே, நாளை காலை 7 மணி முதல் 9 மணி வரை பரிமாரிப்பு பணிகள் நடைபெறுவதால் மெட்ரோ ரயில் சேவை கூடுதலாக‌ 2 மணி நேரம் பாதிக்கப்பட உள்ளது.
எம்ஜி சாலை மற்றும் பையப்பனஹள்ளி இடையே காலை 9 மணிக்குப் பிறகு திட்டமிட்டபடி மெட்ரோ ரயில் இயக்கப்படும். அன்றைய தினம் மற்ற மெட்ரோ ரயில் நிலையங்களின் சேவை அட்டவணையில் எந்த மாற்றமும் இருக்காது என்று பெங்களூரு மெட்ரோ மெட்ரோ ரயில் கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.