நாளை பி யு சி தேர்வு முடிவுகள்

பெங்களூர் : ஜூன். 17 – இரண்டாம் ஆண்டு பி யு சி தேர்வுகளின் முடிவுகள் நாளை அறிவிக்கப்படவுள்ளதாக கல்வித்துறை அமைச்சர் பி சி நாகேஷ் தெரிவித்துள்ளார் . இது குறித்து ட்வீட் செய்துள்ள பி சி நாகேஷ், இரண்டாம் ஆண்டு பி யு தேர்வுகளின் முடிவுகளை நாளை அறிவிக்கப்படும். 6.80 லட்சம் மாணவர்கள் தேர்வுகளை எழுதியுள்ளனர் . 6,84,255 மாணவர்கள் தேர்வுக்கு பதிவாகியிருந்தனர். அவர்களில் 3,46,936 மாணவர்கள் மற்றும் 3,37,319 மாணவியர் பதிவாகியிருந்தனர் . மாநிலத்தின் 1076மையங்களில் தேர்வுகள் நடந்ததுடன் , இந்த தேர்வுகளுக்கான முடிவுகள் நாளை காலை வெப் சைட்டுகளில் கிடைக்க உள்ளது என அமைச்சர் பி சி நாகேஷ் தன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.