நாளை மறுநாள் மைசூர் தசரா திருவிழா ஆரம்பம்

மைசூர், அக்.13-
பிரபல திரைப்பட ஒளிப்பதிவாளர், திரைப்பட இசையமைப்பாளர், டாக்டர் ஹம்சலேகா, 2023 ம் ஆண்டின் தசரா திருவிழாவை
விருட்சகம் லக்னத்தில் அக்டோபர் 15ம் தேதி காலை 10 :15 முதல் 10 36 வரை குள் சாமுண்டீஸ்வரி மலைதேவி சன்னதியில் தொடங்கி வைக்கிறார்.
மாநில முதல்வர் சித்ராமையா, துணை முதல்வர் டி. கே. சிவகுமார், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சுரங்கத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, திறன் மேம்பாடு மற்றும் தொழில்நுட்ப மின்னணு இயல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ராஜ் சந்திரசேகர், வேளாண்மை மற்றும் விவசாய நலத்துறை அமைச்சர் உட்பட பலர் இவ்விழாவில் கலந்து கொள்கின்றனர்.
இந்நிகழ்ச்சியில் மத்திய விவசாயத்துறை அமைச்சர் சோபா கரந் தலஜே, சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை அமைச்சர் நாராயணசாமி, உரங்கள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை இணை அமைச்சர் பகவத் கூபா, ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
இவ்விழாவுக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஜி.டி. தேவகவுடா, தலைமை வைக்கிறார். சமூக நலத்துறை அமைச்சரும் மைசூர் மாவட்ட பொறுப்பு அமைச்சருமான மகா தேவப்பா, கால்நடை துறை பராமரிப்பு, பட்டு வளர்ப்பு துறை அமைச்சர் கே. வெங்கடேஷ், கன்னட கலாச்சாரத்துறை அமைச்சர் சிவராஜ் சங்கப்பா, சட்டம் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் எச். கே.பாட்டில், போக்குவரத்து மற்றும் முஜ்ராய்த் துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி, எரிசக்தி அமைச்சர் கே .ஜே. ஜார்ஜ், வனம், உயிரியல், சுற்றுலாத்துறை அமைச்சர், ஈஸ்வர் காண்ட்ரே, நகரப்புற வளர்ச்சி துறை அமைச்சர் பைரத்தி சுரேஷ் மைசூர் , மாநகர ஆணையர் சிவகுமார் உட்பட பலர் பங்கேற்கின்றனர்.
அக்டோபர் 23, 24 ஆகிய இரு நாட்களில் பல இடங்களில் ஒரு வழி போக்குவரத்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பழைய மைசூர்- பெங்களூர் நெடுஞ்சாலையில் ஆக் சந்திப்பில் இருந்து ராஜேந்திரா நகர் சாலை, சிவாஜி ரோடு, டாக்டர் ராஜ்குமார் சர்க்கிள், வரை வாகனங்களை பெங்களூர் – மைசூர் சாலை வழியாக, இடதுபுறம் திரும்பி மவுலானா அப்துல் கலாம் ஆசாத் வட்டம், ராஜேந்திரா நகர், மெயின் ரோடு, டாக்டர் ராஜ்குமார் வட்டம் வரை, ஒரு வழியாக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதுஎதிர் திசையில் வரும் அனைத்து வாகனங்களும் 23, 24 ஆகிய இரு நாட்கள் தடை செய்யப்பட்டுள்ளது.
டி.என்.நரசிம்மமூர்த்தி வட்டத்திலிருந்து, பழைய மைசூர்- பெங்களூர் சாலை சந்திப்பு ஆக் சாலை வரை, டி. என் நரசிம்மூர்த்தி வட்டத்திலிருந்து, பழைய மைசூர் சாலை சந்திப்பில் நோக்கி, கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி போக்குவரத்து வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது.இதுபோல 24 ம் தேதி அரண்மனை பலராம் கேட், ஆல்பர்ட் விக்டர் சாலை ,கே. ஆர்.,சாயாஜிராவ் ரோடு, ஆயுர்வேத சர்க்கிள், ஹைவே சர்க்கிள், நெல்சன் மண்டேலா சாலை ,தசரா ஜம்பு வாரி ஊர்வலம் காலை 6 மணி முதல் 8 மணி வரை நடைபெறுவதால், வாகனங்கள் செல்ல தடை செய்யப்படுகிறது.அக்டோபர் 24 ம் தேதி மாலை பன்னி மண்டபத்தின் பிரதான வாயில் வரை, அனைத்து வகையான வாகனங்களை இயக்கமும் தடை செய்யப்பட்டுள்ளது. அனுமந்தா நகர், மூன்றாவது மெயின் ரோடு சந்திப்பிலிருந்து, பெங்களூர் சாலை, பழைய டோல்கேட் வரை, பனானி மண்டபத்தின் அனைத்து வகையான வாகனங்களும் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.