நாளை முதல் ஆகஸ்ட் 9 வரை விவசாயிகள் போராட்டத்துக்கு அனுமதி

புதுடெல்லி, ஜூலை 21: ஜந்தர் மந்தரில் நாளை முதல் ஆகஸ்ட் 9 வரை போராட்டம் நடத்த விவசாயிகளுக்கு டெல்லி அரசு அனுமதி அளித்துள்ளது.
டெல்லியில் விவசாயிகள் போராட போலீசார் தொடர்ந்து தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர்.
இது நிச்சயமாக விவசாயிகளின் தலைவர்களை கோபப்படுத்தியது. எந்தவொரு காரணத்திற்காகவும் தாங்கள் போராட்டத்தில் பின்வாங்க மாட்டோம் என்று விவசாய தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
டெல்லியின் பல்வேறு பகுதிகளில் உள்ள விவசாயிகள் கடந்த 7 மாதங்களாக மத்திய அரசு நிறைவேற்றிய மூன்று சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
நாடாளுமன்றக் கூட்டம் தொடங்கி உள்ள நிலையில் 200 விவசாயிகள் நாளை நாடாளுமன்ற வளாகத்தின் முன் பேரணி நடத்த முடிவு செய்துள்ளனர்
நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் விவசாயிகள் ஒவ்வொரு நாளும் போராட்டத்தில் கலந்து கொள்வார்கள்