நாளை முதல் துணை முதல்வரின் ஜனதா தர்ஷன் தொடக்கம்

பெங்களூரு, ஜன. 2: பெங்களூரு மேம்பாட்டு துறையை வைத்துள்ள துணை முதல்வர் டி.கே.சிவகுமார், ஜனவரி 3ம் தேதி முதல் கே.ஆர்.புரத்தில் உள்ள ஐடிஐ கிரிக்கெட் மைதானத்தில் முதல் ஜனதா தரிசனத்தை (பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டம்) நடத்துகிறார்.
பிபிஎம்பி, பிடிஏ, பெஸ்காம் மற்றும் வருவாய்த் துறை போன்ற முக்கிய சிவில் ஏஜென்சிகளின் அதிகாரிகள், பொறியாளர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொள்ளும் கூட்டத்தில், மகாதேவபுரா மற்றும் கேஆர் புரம் சட்டமன்றத் தொகுதிகளில் வசிப்பவர்கள் தங்கள் குறைகளைத் தெரிவிக்குமாறு சிவகுமார் வலியுறுத்தியுள்ளார்.
எலஹங்கா, பேட்ட‌ராயனபுரா மற்றும் தாசரஹள்ளி தொகுதிகளுக்கான எலஹங்கா நியூ டவுன், டாக்டர் அம்பேத்கர் பவனில் ஜனவரி 5 ஆம் தேதி சிவக்குமார் சந்திப்பும், செயின்ட் ஜான்ஸ் சாலையில் உள்ள ஆர்.பி.ஏ.என்.எம்.எஸ் உயர்நிலைப் பள்ளியிலும் சந்திப்பு நடைபெறும் என்றும் துணை முதல்வர் அலுவலகம் அறிவித்துள்ளது. ஹெப்பாள் சிவாஜிநகர் மற்றும் புலகேசிநகர் தொகுதிகளில் ஜனவரி 6ஆம் தேதி நடைபெறுகிறது. மீதமுள்ள தொகுதிகளுக்கான தேதிகள் இரண்டாம் கட்டமாக அறிவிக்கப்படும் என்று துணை முதல்வர் தெரிவித்துள்ளார்.நிகழ்ச்சியை வெற்றிகரமாக்க, கூட்ட மையங்களில் 15 கவுன்டர்களை திறந்து பொதுமக்கள் துணை முதல்வர் மற்றும் உள்ளூர் எம்.எல்.ஏ.வை நேரடியாக சந்திக்கும் வகையில் டோக்கன்களை வழங்க பிபிஎம்பி திட்டமிட்டுள்ளது. சமர்ப்பிக்கப்படும் புகார்கள் ஒருங்கிணைந்த பொது குறை தீர்க்கும் அமைப்பில் பதிவேற்றம் செய்யப்படும் என டி.கே.சிவகுமார் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.ஜனவரி 3 ஆம் தேதி மகாதேவபுரா, கே.ஆர்.புரம் தொகுதிகளுக்கான குறை தீர்வு முகாம் கே.ஆர் புரம் ஐடிஐ திடலில் நடைபெறும். ஜனவரி 5 ஆம் தேதி எலஹங்கா, பேட்ட‌ராயனபுரா, தாசரஹள்ளி ஆகிய தொகுதிகளுக்கு எலஹங்கா நியூடவுன் டாக்டர் பிஆர் அம்பேத்கர் அரங்கத்தில் நடைபெறும். ஜனவரி 6 ஆம் தேதி ஹெப்பாள், சிவாஜிநகர், புலிகேசிநகர் தொகுதிகளுக்கு செயின்ட் ஜான்ஸ் சாலையில் உள்ள ஆர்பிஏஎன்எம்எஸ் உயர்நிலைப் பள்ளியில் நடைபெறுகிறது.