
பெங்களூர், பிப்.22-
பெங்களூர் சிவாஜி நகரில் உள்ள ஐ. எம். ஏ .,நிதி நிறுவனத்தில் பணம் முதலீடு செய்து ஏமாற்றம் அடைந்தவர்களுக்கு விரைவில் அவர்களுக்கு சேர் வேண்டிய தொகையை விரைவில் செலுத்தப்படும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
ஐ எம் ஏ நிறுவனத்தில் முதலீடு செய்த 80 கோடி ரூபாய் தொகையை விரைவில் வழங்கப்படுகிறது.
2019 ஜூனில் தங்கம், வைரம், நகைகள் ஏலம் விடப்பட்டதில் 65 ஆயிரம் கோடி ரூபாய், உள்ளன. விலை உயர்ந்த வாகனங்கள் ஏலம் விட்டு 15 கோடி ரூபாய் பணம் பெற்று மொத்தம் 80 கோடி ரூபாயை முதலீட்டாளர்களுக்கு வழங்கப்பட உள்ளது.
நீதிமன்றத்தில் உள்ள இவ்வழக்கின் தீர்ப்பில் சாதகமான முடிவு கிடைத்தால் அத்தொகையை செலுத்த தயாராக உள்ளனர்.
இது மட்டுமின்றி அசையும், அசையா சொத்துக்கள்
380 கோடி முதல் 400 கோடி ரூபாய் வரை உள்ளன. இவைகள் அமலாக்கத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. அதனால் அதன் உத்தரவு இல்லாமல் விற்க முடியாது.ஏற்கனவே 2 லட்சம் முதல் 50ஆயினம் ரூபாய் வரை செலுத்த வேண்டிய முதலீட்டாளர்களுக்கு முழுமையாக செலுத்தி உள்ளனர்.
ஏற்கனவே 6,900 புகார்கள் மூலம் 2, 600கோடி ரூபாய் முதலீட்டாளர்களுக்கு செலுத்த விண்ணப்பித்திருந்தேன். இதன் விசாரணை ஆணையம் விசாரித்து 1,260 கோடி ரூபாய் மட்டுமே செலுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஐ.எம்.ஏ., நிறுவனத்தின் டெல்லி, உ.பி., யில் உள்ள மதராசு சொத்துக்களையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.