நிமோனியா காய்ச்சல் மருத்துவமனையில் பெண் சாவு

பெங்களூரு, நவ.23-பெங்களூர் ஆர்.டி. நகரில் உள்ள சிராயு மருத்துவமனையில் நிமோனியா காய்ச்சலால் அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது பெயர்
கவிதா (24) உயிரிழந்த கவிதாவின் கணவர் சுனில் கூறும்போது மருத்துவர் அளவுக்கு அதிகமாக ஊசி மற்றும் மாத்திரை கொடுத்ததால் மரணம் ஏற்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.
உயிரிழந்தவரின் உறவினர்கள் மருத்துவமனை முன்பு திரண்டு மருத்துவருக்கு எதிராக கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். கடந்த 7 மாதங்களுக்கு முன்புதான் கவிதா-சுனில் திருமணம் நடந்தது.
ஒரு மாதத்திற்கு முன்பு கவிதாவுக்கு கருச்சிதைவு ஏற்பட்டது. பின்னர் இறந்த கவிதா சிறு பிரச்சனையால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.