நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: இந்தியா பேட்டிங் தேர்வு

லக்னோ, நவ. 25- நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்தியா – நியூசிலாந்து இடையேயேன டி20 தொடரை 0-3 என்ற கணக்கில் இந்தியா அபார வெற்றிபெற்றது.
இந்நிலையில், இரு அணிகளும் மோதும் முதல் டெஸ்ட் போட்டி உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள கிரீன் பார்க் ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்று வருகிறது.
இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரஹானே முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி, இந்திய அணி முதலில் களமிறங்க உள்ளது.