நிர்மலா சீதாராமனுக்கு துணை முதல்வர் கண்டனம்

பெங்களூர், ஏப் 8-
கர்நாடகாவில் நிலவிவரும் வறட்சிக்கு மத்திய அரசு எந்த நிதியும் வழங்கவில்லை தவறான தகவல்களை தெரிவித்துக் கொண்டு பொய்களை சொல்லுகிறது என்று துணை முதல்வர் டி கே சிவகுமார் தெரிவித்துள்ளார்.
பெங்களூரில் தமது தம்பிக்காக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருந்தபோது அவர் கூறியதாவது:
தேர்தல் விதிமுறைகள் உள்ள நிலையில் கர்நாடகாவுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய கர்நாடக அரசு கோரிக்கை மனுவை தாமதமாக அளித்ததாக
பொய்யான தகவல்களை நிர்மலா சீதாராமன் லோக்சபா தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவித்துள்ளார்.
நாங்கள் கடந்த அக்டோபர் மாதம் வறட்சி க்காக நிவாரணம் கேட்டு கோரிக்கை மனுவை அளித்தோம்.
நான்கு மாதங்கள் கடந்து விட்டது. அப்போது எந்த தேர்தல் விதிமுறைகளும் இல்லை. இ
ஆனால், அமைச்சர் நிர்மலா சீதாராமன் கோரிக்கை மனுவை கர்நாடக அரசு தாமதமாக அளித்ததாக தவறான தகவல்களை தெரிவித்து வருகின்றார்.
கர்நாடக அரசுக்கு அநீதி ஏற்பட்டதை ஒப்புக்கொள்கிறேன் என்றும் கூறியுள்ளார். அதனால் அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.