நிலக்கரி தட்டுப்பாடு 5 பிரிவுகளில் மின் உற்பத்தி நிறுத்தம்

ராய்ச்சூர் : அக்டோபர் . 12 – நிலக்கரியின் தீவிர தட்டுப்பாடால் இங்குள்ள ஐந்து பிரிவுகளின் மின்சார உற்பத்தி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் மின்தட்டுப்பாடு ஏற்படும் பயம் ஏற்பட்டுள்ளது. ஷக்தி நகரின் ஆர் டி பி எஸ் மையத்தில் நிலக்கரி பிரச்சனை தீவிரமாகியுள்ளது. இந்த நிலையில் நேற்று நான்கு பிரிவுகளில் மின் உற்பத்தியை நிறுத்திவைத்து மீதமுள்ள நான்கு பிரிவுகளில் மட்டும் மின் உற்பத்தி செய்யப்பட்டது. இப்போது நிலக்கரி குறைபாடால் மேலும் ஒரு பிரிவில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. ஆர் டி எஸ்ஸில் மொத்தம் எட்டு பிரிவுகள் இருப்பதுடன் அவை அனைத்தும் சேர்ந்து 1760 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் பெற்றவையாகும் . தற்போது எட்டு பிரிவுகளில் 2, 4 , 6 பிரிவுகளிலிருந்து 490 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இன்னும் மீதமுள்ள 1, 3, 5, 7, 8 பிரிவுகளில் மின்சார உற்பத்தி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது . இந்த நிலையில் மாநிலத்தில் மின்சார தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.