நிலநடுக்கம் பலி 56 ஆக உயர்வு

ஜாகர்தா : நவம்பர். 21 – இந்தோனிஷியாவின் ஜாகர்தாவில் பெரிய அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதில் குறைந்தது 56 பேர் இறந்திருப்பதுடன் 700க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக தெரிய வருகிறது. ரிக்டர் அளவில் 6.9 அளவிற்கு சக்திவாய்ந்த நில நடுக்கம் இங்கு ஏற்பட்டுள்ளது. தீவு பகுதியான ஜாவாவில் இந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த பூகம்பத்தின் விளைவாக இந்தோனேஷியா தேச மக்கள் மிகவும் அதிர்ச்சியுற்றுள்ளனர்.

இந்த கொடூர நிலநடுக்கத்தால் மேலும் பல உயிர்சேதங்கள் குறித்த தகவல்கள் வாய்ப்புகள் உள்ளன. மேலும் அதிகமானோர் இறந்துள்ளதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நில நடுக்கத்தால் ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்திருப்பதுடன் இதனால் பலரும் பிரச்சனைகளில் சிக்கியுள்ளனர். கட்டிடங்கள் குலுங்கிய நிலையில் பலரும் பயந்து அலறி அடித்துக்கொண்டு வீதிகளுக்கு வந்துள்ளனர். இந்த பூகம்பத்தின் விளைவாய் இந்த தீவின்பல பகுதிகளில் மண் சரிவுகள் ஏற்பட்டிருப்பதுடன் இந்த மண் சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி முழு வீச்சில் நடந்து வருவதாக பாதுகாப்பு துறை ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.