நிலநடுக்கம்

துருக்கி, துருக்கியில் அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதியடைந்துள்ளனா்.தலைநகர் அங்கராவில் உள்ளூர் நேரப்படி அதிகாலை 4.08 மணியளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும், ரிக்டர் அளவில் 6.0ஆகப் பதிவாகியுள்ளதாகவும் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதில் மக்கள் பீதியடைந்தனா். எனினும், உயிா்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை. முன்னதாக, இந்தோனேசியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் இதுவரை 268 பேர் பலியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.