நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து பிடிஏ அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்

பெங்களூர், மார்ச் 14 – நகரின் புறப்பகுதியில் அமைய உள்ள முனைவர் சிவராம் காரந்த் லே அவுட்டிற்கு மேலும் 35 கிராமங்களை சேர்க்க பெங்களுர் அபிவிருத்தி குழுமம் (பி டி ஏ ) திட்டமிட்டிருப்பதை கண்டித்து விவசாயிகள் நேற்று நகர பி டி ஏ தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இந்த லே அவுட் மனைகள் விநியோகிப்பதற்கு தயாராகியுள்ள நிலையில் ஏற்கெனவே கையகப்படுத்த விவசாயிகளின் நிலங்களுக்கு பாக்கியுள்ள பரிகார தொகையை முதலில் செலுத்தியாக வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாய் உள்ளது. இந்த லே அவுட்டிற்கு ,மேலும் 2000 ஆயிரம் ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தஉள்ள பி டி ஏ வின் முடிவை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என விவசாயிகள் பி டி ஏ தலைவர் என் ஜெயராமுக்கு கோரிக்கை மனுவும் அளித்துள்ளனர். பி டி ஏ கையகப்படுத்த முடிவு செய்துள்ள 35 கிராமங்கள் நகரின் கிழக்கு மற்றும் வடக்கு பகுதிகளில் உள்ளன. இது குறித்து சமூக சேவகர் மாவள்ளிபுரா ஸ்ரீனிவாஸ் என்பவர் கூறுகையில் சிவராம் காரந்த் லே அவுட்டுக்கெனவே பி டி ஏ 2500 ஏக்கர் நிலங்களை வலுக்கட்டாயமாக அபகரித்து விவசாயிகள் வாழவை கேள்விக்குறியாகியுள்ளது. தற்போது நிலங்களை இழந்த விவசாயிகள் தங்களுக்கு பி டி ஏ கடுக்க வேண்டிய நிவாரண தொகையும் கிடைக்காமல் இன்னலுக்குள்ளாகியுள்ளனர். அப்படியும் பி டி ஏ நிலங்களை ஆக்கிரமிக்கும் பணியிகளை தொடர்ந்தால் விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோம் என்றார். தவிர விவசாயிகள் இது குறித்து நீதிமன்றத்தை நாடவும் யோசித்து வருகின்றனர். பி டி ஏவுக்கு நிலா கையகப்படுத்த ஆய்வுகள் மேற்கொள்ள உத்தரவிடும் உரிமை இல்லை என்பது மற்றொரு விவசாயியின் கருத்து. ஏற்கெனவே கையகபடுத்தப்பட்ட நிலங்களுக்கு இன்னமும் நிவாரண தொகைகள் வழங்கப்படாத நிலையில் பி டி ஏவின் இந்த செயல் கண்டிக்கத்தக்கது. இதுவே சாட்டிலைட் வட்ட சாலை கட்டிவரும் தேசிய நெடுஞசாலை ஆணையம் 2013 சட்ட விதிகளின்படி கையகப்படுத்தப்பட்ட அனைத்து நில உரிமையாளர்களுக்கும் நஷ்ட ஈடு முறையாக வழங்கியுள்ளது. ஆனால் பி டி ஏ நஷ்ட ஈடு வழங்கும் விஷயத்தி ல் இன்னமும் பிரிட்டிஷ் முறையை பின்பற்றுகின்றது . இதற்கு நாங்கள் இடம் கொடுக்க மாட்டோம். இதே போல் வட்ட சாலை திட்டத்திற்கு நிலங்களை இழந்தவர்களுக்கும் உடனடியாக நஷ்டத்தொகை கொடுத்தாக வேண்டும் என்பதும் விவசாயிகளின் கோரிக்கை