நிலாவில் சிவசக்தி

பெங்களூரு, ஆகஸ்ட்.26 – சந்திரயான் 3 திட்டம்வெற்றியடைந்ததைதொடர்ந்து,இஸ்ரோ விஞ்ஞானிகளை பாராட்டுவதற்காக பிரதமர் மோடி பெங்களூருவுக்கு வருகை தந்தார். அவர் விஞ்ஞானிகளை பாராட்டியதுடன்,அவர்கள் மத்தியில் பிரதமர்
உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது;உங்கள் மத்தியில் இன்று இருப்பதன் மூலம் எனக்குதனிப்பட்ட மகிழ்ச்சி ஏற்படுகிறது.நான் தென் ஆப்பிரிக்காவுக்குசென்றபோது என் மனம்முழுவதுமாக உங்களுடனேஇருந்தது. நான் இந்தியாவுக்கு வந்த
உடனே உங்கள் அனைவரையும்பார்க்க வேண்டும் என நான்நினைத்தேன்.உங்கள் அனைவருக்கும் நான்சல்யூட் செய்ய நினைத்தேன்.நீங்கள் தேசத்தை எந்தஅளவுக்கு உயரத்துக்குஅழைத்துச்சென்றுள்ளீர்கள்என்றால், இது சாதாரணமானது
அல்ல. இந்தியா நிலவில் கால்வைத்துள்ளது. நம் நாட்டின்கவுரவத்தை நிலவில் நாம்நிலைநாட்டியுள்ளோம்.விண்வெளி துறையின் சாதனைகள்,பங்களிப்பு இளைஞர்களுக்குஉந்துசக்தியாகவிளங்குகிறது.நிலவில் விக்ரம் லேண்டர்இறங்கிய இடம் சிவசக்தி என்றபெயரில் அழைக்கப்படும். இமயம்முதல் கன்னியாகுமரி வரைஇந்தியர்களை இணைக்கின்றபெயராகஇது இருக்கும். இந்த
சக்தி என்பது பெண்களின்சக்தியும் கூட. சந்திரயான்-3திட்டத்தில் பெண்களின்பங்களிப்பும் முக்கியமாகஉள்ளது, எனவே சிவசக்திஎன்ற பெயர் அவர்களின்அர்ப்பணிப்பிற்கும் ஒருசாட்சி. அதேபோல 2019-ல் சந்திரயான் 2 நிலவில இ ட ம் திரங்கா(மூவர்ணக்கொடி)என அழைக்கப்படும். எந்த தோல்வியும் இறுதியானது அல்ல என்பதை நமக்குநினைவூட்டவே திரங்கா
என பெயர் சூட்டப்படுகிறது.சந்திரயான் 3 லேண்டர் நிலவில் கால்பதித்த ஆகஸ்ட் 23ம் தேதி இனி தேசிய விண்வெளி நாளாக
கொண்டாடப்படும். ஆகஸ்ட் 23ந்தேதி விஞ்ஞானம், அறிவியல், விண்வெளி ஆராய்ச்சி ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். இவ்வாறு பிரதமர் மோடிபேசினார்.