நில தகராறில் ஒருவர் குத்தி கொலை

பெங்களுர் : அக்டோபர் . 30 – நில தகராறு விஷயமாக ஏற்பட்ட பகையில் ஆத்திரமுற்று ஒருவரை கொடூரமாக குத்தி கொலை செய்துள்ள சம்பவம் ஹெப்பகோடி போலீஸ் நிலையத்தின் அருகிலேயே நேற்று இரவு நடநதுள்ளது . ஹெப்பகோடியை சேர்ந்த ரமேஷ் என்பவர் இந்த சம்பவத்தில் கொலையுண்டவர் . நேற்று இரவு 10.30 மணியளவில் பழைய பகை காரணமாக ரமேஷை அவர் வீட்டின் எதிரில் வசித்து வரும் நபர் வேறு சிலருடன் சிலருடன் சேர்ந்துகொண்டு ரமேஷை கொலை செய்துவிட்டு தப்பியோடியுள்ளனர். ஹெப்பாகோடியில் உள்ள இடத்தி;ல் வீடு கட்டும் விஷயமாக அடிக்கடி ரமேஷ் மற்றும் குற்றவாளிகளுடன் தகராறுகள் நடந்து வந்துள்ளது . அரசு சார்பில் ஒதுக்கப்பட்ட நிலத்தில் ரமேஷ் நேற்று அடிக்கல் நாட்டியுள்ளார். இந்த இடம் தனக்கு சொந்தமானது என எதிர் வீடு ஜகதீஷ் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.

ஹெப்பகோடி நகரசபை இந்த இடம் ரமேஷுக்கு சொந்தமானது என சான்றிதழ் அளித்திருந்தது . இதனால் ஆத்திரமடைந்த ஜெகதீஷ் தன் கூட்டாளிகளுடன் சேர்ந்து ரமேஷை கொலை செய்து தப்பியோடியுள்ளார். சம்பவ இடத்திற்கு ஹெப்பகோடி போலீசார் வந்து மேற்பார்வையிட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.