மங்களூர் : அக்டோபர் . 25 – நிழல் உலக தாதா கொடூரன் ரவி பூஜாரியின் கூட்டாளிகள் மீது நடவடிக்கை மேற்கொண்ட கோனாஜி போலீஸ் நிலைய அதிகாரிகள் இவர்களை கைது செய்வதில் வெற்றியடைந்துள்ளனர். மிகவும் திறமையான துப்பாக்கி சூட்டாளன் கேரளாவின் மஞ்சேஷிஸ்வர பகுதியை சேர்ந்த முஹம்மத் ஹனீப் என்ற முன்னா கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளி. இவன் கராவளி மாவட்டத்தின் பல போலீஸ் நிலையங்களில் தேடப்பட்டுவரும் குற்றவாளியாவான். இவன் மிக பெரிய குற்றவாளியாய் இருந்ததுடன் ரவி பூஜாரியின் அனைத்து குற்றங்களுக்கும் மங்களூரு உட்பட கடலோர பகுதிகளில் உடன் துணையாய் இருந்துள்ளான். தவிர பல துப்பாக்கிசூடு , வழிப்பறி , மற்றும் மிரட்டல் விவகாரங்களில் மாநிலத்தின் பல போலீஸ் நிலையங்களில் இவனுக்கு எதிராக வழக்குகள் உள்ளது.இவனுக்கு எதிராக கோனாஜி , மங்களூர் வடக்கு , புத்தூர் , பர்கே , விடலா , உள்ளால் , பெங்களூர் நிலையம் ஆகிய போலீஸ் நிலையங்களில் வழக்குகள் பதிவாகியுள்ளன. 2010 மற்றும் 2013 காசர்கோடு பொதுப்பணித்துறை குத்தகையாளர் துப்பாக்கி சூடு விவகாரம் ,கேரளாவின் மஞ்சேஸ்வரத்தின் திருட்டு புகார் , மற்றும் கும்பலே மற்றும் வித்யாநகர் போலீஸ் நிலையங்களிலும் இவனுக்கு எதிராக வழக்குகள் பதிவாகியுள்ளது. மங்களூரில் வடக்கு பிரிவு போலீஸ் சரகத்தில் சஞ்சீவ் ஷெட்டி சில்க் மளிகை மற்றும் புத்தூர் தலைநகர் நகைக்கடை ஆகியவற்றில் துப்பாக்கிசூடு வடத்தியுள்ளான். குற்றவாளியை கேரளா போலீசார் கைது செய்ததுடன் தற்போதும் இவன் ஹவாலா வசூலில் ஈடுபட்டிருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.