நீச்சல் குளங்கள் தற்காலிக மூடல்

பெங்களூர் : மார்ச் 13 – நஃரில் குடிநீர் தேவைப்பாட்டை சரிப்படுத்தும் முயற்சியாக பெங்களூர் குடிநீர் விநியோகம் மற்றும் கழிவு நீர் வாரியம் நகரின் நீச்சல் குளங்களில் குடிநீரை நிரப்புவதற்கு தடை செய்துள்ளது. இந்த நிலையில் வேறு தண்ணீரை நீச்சல் குளங்களில் நிரப்புவது பொது மக்களின் சுகாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்ற நிலையில் வேறு வழியின்றி நகரின் நீச்ச்சல் குளங்கள் தற்காலிகமாக மூட வேண்டியதை தவிர வேறு வழியில்லை. குடிநீர் வாரிய 1964ம் ஆண்டின் சட்ட பிரிவில் தனக்குள்ள உரிமையை பயன்படுத்தி குடிநீர் வாரியம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை மீறும் நீச்சல் குளங்களுக்கு முதல் முறை 5 ஆயிரம் ரூபாயும் அடுத்த விதி மீறல்களுக்கு ஐந்தாயிரத்துடன் மேலும் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். என பி டபிள்யூ எஸ் எஸ் பி தன் உத்தரவில் தெரிவித்துள்ளது . இது குறித்து குடிநீர் வாரிய தலைவர் முனிவர் ராம்பிரசாத் மனோகர் கூறுகையில் காவேரி குடிநீர் மற்றும் நிலத்தடி நீர் இரண்டையும் சேமிக்கவேண்டிய கட்டாயம் இருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது . தற்போது கையிருப்பிலுள்ள குடிநீரை சரியான வகையில் விநியோகிக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது .வாரியத்தின் இந்த உத்தரவு நகரின் விளையாடுமற்றும் நீச்சல் மற்றும் உடற்பயிச்சி வீரர்களுக்கு ஏமாற்றத்தை தரலாம் . நீச்சல் குள தண்ணீர் தினமும் மாற்றப்படுகிறது என்பது தவறான கற்பனை . தினம் குளத்தின் ஒருபகுதி தண்ணீர் மட்டுமே மாற்றப்படுகிறது . இந்த தண்ணீரை ஒரு மாதத்திற்கு பயன்படுத்தலாம் . எனவே சில நீச்சல் குளங்கள் சில நாட்களுக்கு செயல்பட்டாலும் பெரும்பாலானவை மூடவேண்டிவரும். என்றார் , இது குறித்து விளையாட்டு ஆர்வலர் ஒருவர் கூறுகையில் இந்த கோடை காலத்தில் பல்வேறு முகாம்கள் மற்றும் நீச்சல் பயிற்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் அனைத்தும் பாதிக்கப்படும்
தவிர ஒலிம்பிக் மற்றும் வேறு சர்வதேச போட்டிகளுக்கு தங்களை தயார் படுத்திக்கொள்ளும் விளையாட்டு வீரர்களையும் இது பாதிக்கும் . நாடு முழுக்கவிருந்தும் நீச்சல் வீரர்கள் பயிற்சிக்காக நம் நகருக்கு வருகிறார்கள். இப்போது நீச்சல் குளங்களை மூடிவிடுவதால் அவர்களின் பயிற்சி பாதிக்கப்படும். என்றார். .