நீட் தேர்வு 95 சதவிகிதம் பேர் தேர்வு எழுதினர்

புதுடெல்லி, ஜூலை 18-எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேருவதற்காக ‘நீட்’ எனப்படும் நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான ‘நீட்’ தேர்வு நேற்று நாடு முழுவதும் நடைபெற்றது. தமிழகத்தில் இந்த தேர்வு எழுதுவதற்கு ஏராளமான மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து இருந்தனர். மாணவர்கள் நண்பகல் 11.40 மணி முதல் 1.30 மணி வரை தேர்வு அறைக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். அதன்பிறகு வந்த யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. பின்னர் 2 மணிக்கு தேர்வு தொடங்கி மாலை 5.20 மணி வரை நடைபெற்றது. தேர்வு அறைக்குள் மாணவ-மாணவிகள் செல்வதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், நாடு முழுவதும் நேற்று நடைபெற்ற நீட் தேர்வை 95% பேர் தேர்வு எழுதியதாகவும் 18,72,343 பேர் விண்ணப்பித்ததில் 17,78,725 பேர் மட்டுமே வருகை தந்து தேர்வை எழுதினர் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.