பெங்களூரு, செப். 10
ரேணுகாசாமி கொலை வழக்கு தொடர்பாக சமீபத்தில் மீண்டும் சிறைக்கு அனுப்பப்பட்ட நடிகர் தர்ஷன் நீதிமன்றத்தில் ஒரு கடுமையான முறையீடு செய்தார்.
அடிப்படை வசதிகளை வழங்குங்கள் அல்லது எனக்கு விஷம் கொடுங்கள் என்று தெரிவித்துள்ளார்.
நடிகரின் வியத்துக்கு முறையீட்டை தொடர்ந்து நீதிபதி தர்ஷனிடம் அத்தகைய கோரிக்கைகளை வைக்க முடியாது என்றும் அவர்கள் விஷம் கொடுக்க முடியாது என்றும் கூறினார்.
தர்ஷனுக்கு பிரபல அந்தஸ்து வழங்க வேண்டாம் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட நீதிபதி, தர்ஷனை சிறைச்சாலைக்குள் நடந்து செல்ல அனுமதிக்கவும், சிறை கையேட்டின் படி வசதிகளை வழங்கவும் உத்தரவிட்டார்.
தர்ஷனையும் மற்ற சக குற்றவாளிகளையும் வெவ்வேறு சிறைகளுக்கு மாற்ற வேண்டும் என்ற அரசு தரப்பு கோரிக்கை நீதிமன்றம் நிராகரித்தது.
அவர் தொடர்ந்து பரப்பன அக்ரஹாரா சிறையில் தங்க அனுமதித்தது.
ஏற்கனவே தர்ஷனுக்கு துவக்க நிலை வசதிகளை பெங்களூர் பரப்பன அகரஹாரா சிறையில் வழங்க அனுமதிக்க வில்லை. இவை ஆகஸ்ட் 14 வரை இருந்த விபரமாகும்.
சிறைச்சாலைக்குள் இருந்து வெளியே நடமாட அனுமதிக்கவில்லை. இதனால் இவர் பெரிதும் பூரண தொற்று பாதிப்பு ஏற்பட்டது. கூடுதலாக படுக்கை, தலையணை, மற்றும் படுக்கை விரிப்பு, போன்ற அடிப்படை வசதிக்கான அவரது கோரிக்கையை நீதிமன்றம் அங்கீகரித்தது .
அதே நேரத்தில் அனைத்து விதிகளுடன் சிறை கட்டுப்பாட்டில் கண்டிப்பாக இணங்க வேண்டும் என்று வலியுறுத்தியது. பெங்களூர் வெப்பநிலை மிகவும் குளிர்ந்து இருப்பதால், சிறைச்சாலை அதிகாரிகள் இவருக்கு தேவையான கம்பளி, போர்வைகள் வழங்கப்படவில்லை. நீதிபதியை இவரது உத்தரவில் தர்ஷன் மற்றும் அவருடனான பொது சிறை கைதிகள் குற்றவாளிகள் என தீர்மானிக்க வில்லை. எனவே கைதிகளை தாங்கள் உணவு உடைகள் படுக்கைகள் எழுதும் பொருட்கள் புத்தகங்கள் பத்திரிகைகள் ஆகியவைகளை பரிசீலனை செய்து வழங்கலாம் என்று உத்தரவில் பிறப்பிக்கப்பட்டது.















