நீதிமன்றத்திற்கு ஆஜராகாமல் இருந்த ரவுடி கைது

பெங்களூர் : டிசம்பர். 16 – நீதிமன்றத்திற்கு ஆஜராகாமல் தலைமறைவாயிருந்த ரௌடியை சி சி பி போலீசார் கைது செய்துள்ளனர். சம்பிகேஹள்ளி போலீஸ் நிலைய ரௌடி பட்டியலில் இருந்த மஞ்சுநாத் என்பவன் கைது செய்யப்பட்டவன். கொலை , கொலை முயற்சி , மற்றும் வாகனங்களுக்கு தீ வைத்த குற்றங்களுக்காக கைது செய்யப்பட்ட மஞ்சுநாத் கடந்த ஆறேழு மாதங்களாக நீதிமன்றத்து விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்துள்ளான் . பின்னர் பெங்களூர் , மாகடி, குனிகல் வழித்தட பேரூந்துகளில் க்ளீனராக பணியாற்றிவந்துள்ளான். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் தற்போது குற்றவாளியை கைது செய்துள்ளனர். இதே வேளையில் பொதுமக்களிடம் வழிப்பறி செய்ய திட்டம் தீட்டிவந்த நான்கு பேரை சி சி பி போலீசார் கைது செய்துள்ளனர். நவீன் , கிரண் , சேத்தன் மற்றும் ஷரத் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகள். கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் கடந்த டிசம்பர் 12 அன்று பீன்யா தொழிற்பேட்டை காவேரி ஸ்டீல் பெக்டரி அருகில் ஆயுதங்களை வைத்து கொண்டு வழிபறிக்கு திட்டம் தீட்டி வந்தனர். இது குறித்து கிடைத்த நம்பகமான தகவலை வைத்து உடனே நடவடிக்கையில் இறங்கிய போலீசார் இவர்களை கைது செய்துள்ளனர்.