நீதிமன்றத்தில் எடியூரப்பா ஆஜர்

பெங்களூர்: ஜூன். 17 – மறுமதிப்பீடு விவகாரம் தொடர்பாக முன்னாள் முதல்வர் பி எஸ் எடியூரப்பா இன்று மக்கள் பிரதிநிதிகளுக்கு எதிரான குற்றவியல் சிறப்பு நீதி மன்றத்தில் ஆஜரானார். மூத்த வழக்கறிஞர் சி வி நாகேஷுடன் வந்த பி ஜே பி மூத்த தலைவர் எடியூரப்பா ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை நடத்திய நீதிபதி பி ஜெயந்தகுமார் இது குறித்து அறிக்கை அளிக்குமாறு புகார்தாரர் ஆதரவு வழக்கறிஞருக்கு அறிவுறுத்தினார். ஜாமீன் மனுவை பரிசீலித்த பின்னர் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என புகார்தாரர் ஆதரவு வழக்கறிஞர் கே வி தனஞ்செய் நீதிமன்றத்தில் தெரிவித்தார். ஜாமீனை எதிர்க்க காரணங்கள் இருந்தால் ஆட்சேப மனு தாக்கல் செய்யலாம். அதற்கு கால அவகாசம் தருமாறு தனஞ்சய் கேட்டுக்கொண்டதற்கு இந்த விவகாரத்தின் விசாரணை நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டது. 2013ல் வாசுதேவ ரெட்டி என்பவர் தாக்கல் செய்த தனியார் புகார் விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி 79 வயதான எடியூரப்பாவிற்கு சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருந்தது.