நீதிமன்ற காவல் நீட்டிப்பு

ராஜமுந்திரி, அக். 20-
ஆந்திர முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு, திறன் மேம்பாட்டு நிதி முறைகேடு வழக்கில் கடந்த செப்டம்பர் 9-ம் தேதி சிஐடி போலீஸாரால் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் ராஜமுந்திரி மத்திய சிறையில் உள்ளார்.
அவரது நீதிமன்ற காவல் நேற்றோடு முடிய இருந்த நிலையில், காணொலி மூலம் விஜயவாடா லஞ்ச ஒழிப்பு நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தினர். அப்போது சந்திரபாபு நாயுடுவின் நீதிமன்ற காவலை வரும் நவம்பர் 1-ம் தேதி வரை நீட்டிப்பதாக நீதிமன்றம் அறிவித்தது.