நீதிமன்ற வளாகத்திலேயே ராஜினாமா செய்த நீதிபதி

மும்பை, ஆக. 5
மராட்டிய மாநிலம் மும்பை ஐகோர்ட்டு நாக்பூர் கிளை நீதிபதி ரோகித் டியோ, இவர் நேற்று வழக்கு விசாரணையின் போது கோர்ட்டு வளாகத்தில் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
தன் சுயமரியாதைக்கு எதிராக வேலை செய்ய முடியாது என கூறி கோர்ட்டு வளாகத்தில் நீதிபதி ரோகித் டியோ பதவியை ராஜினாமா செய்தார். வழக்கு விசாரணையின் போது கோர்ட்டு வளாகத்தில் தனது பதவியை ராஜினாமா செய்த நீதிபதி ரோகித் கூறுகையில், இந்த கோராட்டில் இருக்கும் அனைவரிடமும் நான் என் பதவியை ராஜினாமா செய்துவிட்டேன் என்பதை உங்களிடம் தெரிவித்துக்கொள்கிறேன். எனது சுயமரியாதைக்கு எதிரான நான் வேலை செய்ய முடியாது. நீங்கள் கடினமாக உழையுங்கள்’ என்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நீதிபதி ரோகித், தனிப்பட்ட காரணக்களுக்காக பதவியை ராஜினாமா செய்தவாகவும், ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துவிட்டேன்’ என்றார்.