நீந்த சென்ற இளம் மருத்துவர் காணவில்லை

பெங்களூர்: செப்டம்பர். 13 – நண்பர்களுடன் நீந்த சென்ற இளம் மருத்துவன் காணாமல் போயுள்ள சம்பவம் கனகபுராவில் உள்ள மாவத்தூறு ஏரியில் நடந்துள்ளது. கனகபுராவில் உள்ள தயானந்த சாகர் மருத்துவ கல்லூரியில் பணியாற்றிவந்த சச்சின் குமார் (26) என்பவன் காணாமல் போன இளம் மருத்துவன் . நேற்று மாலை நண்பர்களுடன் ஏரிக்கு நீந்த சென்ற நிலையில் இவன் ஏரியில் மூழ்கி இறந்திருப்பதாக சந்தேகப்படுகிறது . நண்பர்களிடமிருந்து இது குறித்த தகவல் கிடைத்த உடனேயே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு ஊழியர்கள் ஏரியில் தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் இதுவரை சச்சின் குமார் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இச்சம்பவம் குறித்து கனகபுரா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.