நீரில் மூழ்கி சிறுவன் பலி

உடுப்பி, அக்.6-
நண்பர்களுடன் சேர்ந்து நீச்சலுக்கு சென்ற சிறுவன் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் உடுப்பியில் உள்ள காபு தாலுக்கா, பெளபு அருகே நடந்துள்ளது.
காபு தாலுக்கா ,கே. ஐ. ஏ. டி .பி. திட்ட குடியிருப்பு பகுதியில், வசித்து வரும் கஸ்தூரி என்பவரின் மகன் விசுவாஸ் நாயக்.
இவர் இன்னஜே
எஸ். எஸ். ஆங்கில பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார்.
நேற்று வியாழக்கிழமை பள்ளியில் இருந்து வந்தவுடன், ஏரிக்கு நண்பர்களுடன் சேர்ந்து நீச்சலுக்கு சென்றுள்ளார்.
ஏரியில் அவர் மூழ்கும் போது, மூச்சு திணறில் ஏற்பட்டு மயக்கம் அடைந்துள்ளார். நண்பர்கள் அங்குள்ள ஒரு பெண்ணுக்கு தெரிவித்துள்ளனர்.
அவர் கொடுத்த தகவலின் படி அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து, விசுவாசை மேலே எடுத்தனர். உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பரிசோதித்த போது அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
சிறுவன் இறந்துவிட்ட செய்தி அறிந்து அவரது பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுவனுக்கு நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கி இறந்தானா அல்லது சேற்றில் புதைந்து இந்த சம்பவம் ஏற்பட்டதா என்றும் விசாரித்து வருகின்றனர்