நீரில் மூழ்கி வாலிபர் சாவு

பெங்களூர் : செப்டம்பர் . 21 – நண்பனின் பிறந்தநாளை கொண்டாடவென இளைஞன் ஒருவன் நீரில் மூழ்கி இறந்துள்ள சம்பவம் பன்னர்கட்டா அருகில் உள்ள டி கே நீர்வீழ்ச்சியில் நடந்துள்ளது.
பி டி எம் லே அவுட்டில் வசித்துவந்த தீபக் குமார் (17)என்பவன் இறந்துபோன இளைஞன் . தீபக் ஜெயநகரில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாமாண்டு பி யு படித்து வந்திருந்தான். இவன் தன் நண்பர்களுடன் டிகே நீர்வீழ்ச்சிற்கு சென்றபோது இந்த விபத்து நடந்துள்ளது.
கல்லூரிக்கு விடுப்பு போட்டு நண்பனின் பிறந்த நாள் கொண்டாடவென பன்னேர்கட்டா அருகில் உள்ள டிகே நீர்வீழ்ச்சிற்கு சென்றுள்ளான் . பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு பின்னர் நீர்வீழ்ச்சியில் நீந்த சென்று நீரில் மூழ்கி இறந்துள்ளான் . நீரில் இவன் மூழ்கிய பின்னர் இவனுடனிருந்த நண்பர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவல் அறிந்து வந்த போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நீரில் மூழ்கிய மாணவனின் இறந்த உடலை வெளியே எடுத்துள்ளனர்.இந்த சம்பவம் குறித்து பன்னர்கட்டா போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது