நீரில் மூழ்கி4 மாணவர்கள் பரிதாப சாவு

மங்களூர், பிப்.28- தேர்வு முடிந்து ஆற்றில் நீராடச் சென்று காணாமல் போன நான்கு சிறுவர்களின் சடலங்கள் பழைய ரயில்வே பாலத்தின் அடிப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டன.
சூரத்கல் அகர்மேல் பகுதியைச் சேர்ந்த சந்திரகாந்தா மகன் யஷ்வித் (15), உலதங்கடி தோகூரைச் சேர்ந்த வசந்த் மகன் ராகவேந்திரா (15), சூரத்கல் கோட்டேகோப்லாவில் வசிக்கும் விஸ்வநாத் மகன் நிரூப் (15), சித்ராபூரைச் சேர்ந்த தேவதாசா மகன் அன்வித் (15). இறந்த சிறுவர்கள் ஆவர்
இந்த சிறுவர்கள் மங்களூரு சூரத்கல்லில் உள்ள வித்யாதாயினி பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் அவர் இவர்களின் பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தினர் கதறி அழுத காட்சி மனதை உருக்கியது.
ஆற்றில் நீராடச் சென்ற இவர்கள் பரிதாபமாக உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. நேற்று, பள்ளியில் தேர்வு முடிந்த மாணவ, மாணவியர் வீடு செல்லாமல் மாயமாகினர். இவர்களின் பெற்றோர் மற்றும் போலீசார் இவர்களைத் தேடினர்
பழைய ரயில் பாலத்தின் அடியில் மாணவர்களின் பள்ளிப் பைகள், சீருடைகள் கண்டெடுக்கப்பட்டன. ஆற்றில் நான்கு மாணவர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன.
பள்ளியில் இருந்து நேராக ஆற்றில் நீராட வந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. ஒருவர் நீரில் மூழ்கத் தொடங்கிய போது, ​​மீட்கச் சென்ற மற்றவர்கள் நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. சூரத்கல் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.