நீர் திறப்பு அதிகரிப்பு

சென்னை: நவம்பர். 30 – செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறப்பு வினாடிக்கு 6000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக, சென்னை நகர மக்களுக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரிக்கு, நீர்வரத்து அதிகரித்து வருவதால், ஏரி முழு கொள்ளளவை எட்டியது. தற்போது, தொடர்ந்து மழை பெய்து வருவதால், நேற்று காலை நிலவரப்படி, செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த நீர்மட்ட உயரம் 24 அடியில், தற்போது 22.35 அடி தண்ணீர் உள்ளது.செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறப்பு வினாடிக்கு 6000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நீர் திறப்பு அதிகரிப்பால் அடையாறு கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.