நுபூர் சர்மாவை கைது செய்ய போராட்டம் – கல்வீச்சு கண்ணீர்புகை குண்டு வீச்சு

புதுடெல்லி, ஜூன் 10- முகமது நபி பற்றி ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட பாஜகவைச் சேர்ந்த இரு தலைவர்களை கைது செய்ய வலியுறுத்தி நாட்டின் பல்வேறு நகரங்களில் வெள்ளிக்கிழமை போராட்டங்கள் நடைபெற்றன. நூபுர் ஷர்மா, நவீன் ஜிண்டால் ஆகிய அந்த இரு முன்னாள் நிர்வாகிகளையும் கைது செய்ய வலியுறுத்தி நடந்த இந்த போராட்டங்களின்போது சில இடங்களில் வன்முறை வெடித்தது.


டெல்லி, உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், தெலங்கானா, மகாராஷ்டிரா, ஜார்கண்ட் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன.கடந்த மாதம் நூபுர் ஷர்மா தனியார் ஆங்கில தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதில் ஞானவாபி மசூதி தொடர்பான சர்ச்சை குறித்து விவாதிக்கப்பட்டது.
நூபுர் ஷர்மா பேசும்போது, ​​இந்த முழு சர்ச்சை எங்கிருந்து தொடங்கியது என்று குறிப்பிட்டு சில கருத்துக்களை வெளியிட்டார். அப்போது முகமது நபி குறித்து ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை அவர் தெரிவித்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இதேபோல, டெல்லி பாஜக செய்தி தொடர்பாளர் நவீன் குமார் ஜிண்டாலும் சிறுபான்மை சமூகத்திற்கு எதிராக ட்வீட் செய்த செயல்பாடு சர்ச்சையை தோற்றுவித்தது.
இதைத் தொடர்ந்து நூபுர் ஷர்மாவை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்து பாஜக மேலிடம் நடவடிக்கை எடுத்தது. நவீன் ஜிண்டாலை கட்சியில் இருந்தே பாஜக மேலிடம் நீக்கியதாக அறிவித்தது. ஆனால் இந்த நடவடிக்கையால் இஸ்லாமியர்கள் திருப்தியடையவில்லை. சம்பந்தப்பட்ட இருவர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் குரல் கொடுத்தனர்.டெல்லியில் போராட்டம்
இதைத் தொடர்ந்து தலைநகர் டெல்லியில் உள்ள ஜாமா மசூதிக்கு வெளியே இஸ்லாமியர்கள் திரண்டனர். நூபுர், நவீன் ஜிண்டாலை கைது செய்ய வலியுறுத்தும் பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர் அப்போது பதற்றம பரபரப்பு ஏற்பட்டது உத்தரப் பிரதேசத்தில் பல இடங்களில் போராட்டம் நடந்தது சில இடங்களில் அது வன்முறையாக மாறியது போலீசார் மீதும் கற்கள் வீசப்பட்டன போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர் இந்த விவகாரத்தால் நாடு முழுவதும் பரபரப்பு பதட்டம் நிலவுகிறது