நெருக்கடியான நேரத்தில் தேர்தல் வெற்றி கொண்டாட்டங்கள் வேண்டாம்


பெங்களூரு : மே .2 – கொரோனா தொற்றின் சமயத்தில் மக்களின் உயிரை காப்பாற்றுவது குறித்து கவனம் செலுத்த வேண்டும். அந்த வகையில் தேர்தல் முடிவுகள் எப்படி இருந்தாலும் அதை கொண்டாடுவது வேண்டாம். என மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் டி கே சிவகுமார் கோரிக்கை விடுத்துள்ளார். வாக்காளர்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம். தோல்வி , வெற்றி என இரண்டையும் ஏற்றுக்கொள்ளவேண்டும். இது மக்களாட்சி முறை நியமம். என்றும் அவர் தெரிவித்துள்ளார். மஸ்கி சட்டமன்ற தொகுதியில் அதிக அளவில் ஜெயித்துள்ளோம். வெற்றி பெறுவது வேறு . இப்போது யாரும் வெற்றியை கொண்டாடக்கூடாது. கொரோனா நியமங்களை பின் பற்ற வேண்டும். என்றார். தேர்தல் ஆணயத்திடமிருந்து நமக்கு கண்டிப்பான உத்தரவுகள் வந்துள்ளது. இதை மீறினால் நம் மீது புகார்கள் பதிவு செய்யப்படும். உங்கள் மீதும் வழக்குகள் பதிவாகும். மஸ்கி மட்டுமின்றி மாநிலத்தின் எந்த பகுதியிலும் வெற்றி கொண்டாட்டங்கள் வேண்டாம். பெலகாமியிலும் நாம் வெற்றி பெரும் நம்பிக்கையில் உள்ளோம் என கூறியுள்ளார்.