நெலமங்களா அருகில் நடந்த விபத்தில்தந்தை மகன் சாவு: தாய் படுகாயம்

பெங்களுர் : ஜனவரி. 16 – பெங்களூரில் நடந்த சாலை விபத்தில் இரண்டு பேர் பலியானார்கள் ஒருவர் படுகாயம் அடைந்தார். இரண்டு மோட்டார் சைக்கிள்களுக்கிடையே நடந்த கொடூரர் சாலை விபத்தில் இரண்டு பேர் அதே இடத்தில் உயிரிழந்திருப்பதுடன் ஒரு பெண்மணி படு காயமடைந்துள்ள சம்பவம் நெலமங்களாவின் அடக்கிமாரனஹள்ளியின் மேம்பாலத்தில் நடந்துள்ளது . நெலமங்களா – பெங்களூரு தேசிய நெடுஞசாலையில் தம்பதியர் மற்றும் குழந்தை மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது இந்த விபத்து நடந்துள்ளது. இந்த விபத்தில் படு காயமடைந்த பெண்மணி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சங்கராந்தி பண்டிகையை முடித்து கொண்டு துமகூர் மார்கமாக பெங்களூருக்கு வரும் போது விபத்து நடந்துள்ளது.
இந்த விபத்தில் இறந்தவர்கள் குறித்து இதுவரை எவ்வித தகவலும் கிடைக்க வில்லை. சம்பவ இடத்திற்கு நெலமங்களா போக்குவரத்து போலீசார் சென்று மேற்பார்வையிட்டு வழக்கு பதிவு செய்துள்ளனர். விபத்து நடந்தது எப்படி என்ன காரணம் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் இந்த விபத்தால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது